இன்று 74 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று 74 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
இதனை முன்னிட்டு இன்று (02) பிற்பகல் கொழும்பிலுள்ள கட்சி தலைமையத்தில் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1951 செப்டெம்பர் 2 ஆம் திகதி, முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவால் ஸ்தாபிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இலங்கை அரசியல் களத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களை உருவாக்கிய பெருமை இக்கட்சியே சாரும்.
உலகின் முதல் பெண் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை 41 வருடங்கள் வழிநடத்தினார்.
