இன்று 20 ஆவது நாளாக செம்மணி மனித புதைகுழியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன

செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று 20 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது .

நேற்றும், நேற்று முன்தினமும் 9 மனித என்புகூட்டுத்தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரையிலும் மீட்கப்பட்ட மற்றும் அடையாளம் காணப்பட்ட மனித என்புக்கூடுகளின் எண்ணிக்கை 88 ஆக உள்ளது .அவற்றில், 76 என்புகூட்டுத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

யாழ் நீதவான் நீதிமன்ற நீதவான் ஆனந்தராசா வின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணி தொல்லியல் பேராசிரியார் ராஜ்சோம தேவா சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள், தொல்லியல் துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுவருகிறது .