இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு  இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை  பயணிகள் போக்குவரத்துக்காக விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 15 ஆம் திகதிவரை கொழும்பில் இருந்து  தமது சொந்த ஊர்களுக்கு செல்லவுள்ள மக்களுக்காக இந்த விசேட போக்குவரத்து வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன், 15 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதி வரை  கொழும்பு நோக்கி வரவுள்ள பயணிகளுக்கு விசேட போக்குவரத்து வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக மேல்மாகாணத்தை மையப்படுத்தி  இலங்கை போக்குவரத்து சபையும்  தனியார் துறையும் இணைந்து  சுமார் 7 ஆயிரம் பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளன.

அவசர நேரத்தில் சேவையில் ஈடுபடுத்த 300 பேரூந்துகள் தயார்நிலையில் உள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்  தெரிவித்துள்ளார்