இன்று முதல் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும்

இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் தினங்களில் மழை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்மேற்கு கடற்பகுதியிலும் மழை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

குறித்த பிரதேசங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் பலத்த மழைபெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் தென் மாகாணத்திலும் காற்று இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 50 வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.