இன்று முதல் பாடசாலை உபகரணங்களின் விலை குறைப்பு
நாட்டில் கொப்பிகள், காகிதப் பொருட்கள் உட்பட சகல பாடசாலை உபகரணங்களின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று செவ்வாய்க்கிழமை அமுலாகும் வகையில் குறித்த பொருட்களின் விலைகளை 20% முதல் 25% வரை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரூபாவின் பெறுமதி வலுவடைவதைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடனுதவி வழங்குவதற்கான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு மற்றும் வங்கி வட்டி குறைப்பு காரணமாக இந்த பொருட்களின் விலை அடுத்த மாதத்தில் 35% முதல் 40% வரை குறையலாம்.
தற்போதைய சலுகைகளின்படி உற்பத்திப் பொருட்களின் விலை 20% முதல் 25% வரை குறைக்கப்படும்.
இதனால் 4,000 ரூபாய்க்கு விற்கப்படும் புத்தகப் பை அல்லது ஒரு ஜோடி காலணியின் விலை தோராயமாக 3,000 ரூபாவாக குறையும்.
100 ரூபாய்க்கு விற்கப்படும் பயிற்சிப் புத்தகத்தின் விலை 75 முதல் 80 ரூபாய் வரை குறைவதுடன், 30 நாட்களுக்குப் பின்னர் அதன் விலை 60 ரூபாவாகக் குறைக்கப்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்