இன்று முதல் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்

2023/2024ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று வெள்ளிக்கிழமை முதல் இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று காலை 6 மணி முதல் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்