இன்று முதல் அறிவிக்கப்படும் நோபல் பரிசு : ட்ரம்ப்புக்கு கிடைக்குமா?

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கான நோபல் பரிசு இன்று முதல் அறிவிக்கப்படுகிறது.

முதல் நாளான இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.

உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் நோபல் பரிசு, கடந்த 1091ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு வழங்கியவர்களுக்கு இந்த விருது கொடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்தாண்டுக்கான நோபல் பரிசு பெறப்போகும் விருதாளர்களின் பெயர்கள், இன்று முதல் நாள்தோறும் ஒவ்வொரு துறையாக அறிவிக்கப்பட இருக்கிறது.

முதல்நாளான இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவரின் விபரம் வெளியிடப்பட உள்ளது.

நோபல் பரிசு பெறுபவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழுடன், ரூ.10.41 கோடி (இந்திய மதிப்பில்) வழங்கப்பட இருக்கிறது.

இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ், இந்தியா – பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளுக்கு இடையேயான போர்களை நிறுத்தியதால், அமைதிக்கான நோபல் பரிசைத் தனக்கு வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கேட்டுள்ளார்.

எனவே, ஒக்.,10ஆம் திகதி அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.