
இன்று முதல் அதிகரிக்கும் மின்சார கட்டணம்
இலங்கை மின்சார சபைக்கு இன்று வெள்ளிக்கிழமை முதல் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதியை வழங்கியுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 0 முதல் 30 வரையான அலகுகளுக்கான கட்டணம் 10 ரூபாவில் இருந்து 12 ரூபாவாகவும் நிலையான கட்டணத்தை 150 ரூபாவில் இருந்து 180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
31 முதல் 60 வரையான அலகுகளுக்கான கட்டணம் 25 ரூபாவில் இருந்து 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நிலையான கட்டணமானது 300 ரூபாவில் இருந்து 360 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
61 முதல் 90 வரையான மின் அலகுகளுக்கான கட்டணம் 35 ரூபாவில் இருந்து 41 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன் நிலையான கட்டணம் 400 ரூபாவில் இருந்து 480 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
91 முதல் 120 வரையான அலகுகளுக்கான கட்டணம் 50 ரூபாவில் இருந்து 59 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன் நிலையான கட்டணம் 1180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
