
இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரான ஜனவரி 24 ஆம் திகதி காணாமல் போயிருந்தார்.
சம்பவம் தொடர்பில் ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
நீதிபதிகள் சஞ்சீவ மொராயஸ், மஹேன் வீரமன் மற்றும் தமித் தொட்டவத்த ஆகியோர் அடங்கிய குழு, கைது செய்யப்பட்ட ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டது.
பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் குறித்து ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் 17 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.
