இன்று மின் தடை இல்லை

முஸ்லிம்களின் நோன்பு பண்டிகையை முன்னிட்டு நாட்டில் இன்று மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படமாட்டாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் நாளை  மூன்று மணித்தியாலங்களுக்கும் அதிகளவான காலத்திற்கு மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மின்சாரசபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வலயங்களின் அடிப்படையில்  மூன்று  மணித்தியாலமும் 20 நிமிடமும் இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.