இன்று மின்சாரம் துண்டிக்கப்படும் நேரங்கள்

இன்று திங்கட்கிழமை நாட்டில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய, A முதல் L மற்றும் P முதல் A வரையான வலயங்களிலும், காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரமும், மாலை 5.00 மணிமுதல் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படவுள்ளது.

மேலும், M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5 மணிமுதல் காலை 8 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின் துண்டிப்பு நேரம் தொடர்பான அட்டவணை