இன்று நள்ளிரவு முதல் சீமெந்தின் விலை குறைப்பு
இன்சீ மகாவெலி சீமெந்தின் அதிகபட்ச சில்லறை விலை இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் 225 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இன்சீ சீமெந்து இலங்கை (INSEE Cement ) நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விலைகுறைப்பின் மூலமாக 50 கிலோகிராம் மஹாவலி மரைன் பிளஸ் சீமெந்து இன்று நள்ளிரவு முதல் 2,750 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.