
இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் மாற்றம்
நாட்டில் எரிபொருட்களின் விலைகள் இன்று இரவு திங்கட்கிழமை திருத்தப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தாலும், அது இன்று இடம்பெறும் எனவும் எவ்வாறாயினும் எரிபொருள் விலையில் பெரிய மாற்றம் இருக்காது எனவும் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையை மாதாந்தம் திருத்தியமைக்க கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
