இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள் விலை குறைக்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 40 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 450 ரூபாவாக இருந்த நிலையில்,  410 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 540 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 510 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

இதேவேளை, இந்த விலைக்குறைப்புக்களுக்கு நிகராக தாமும் இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் பெற்றோல் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது

 

செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்

எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்