இன்று தங்கத்தின் விலை?

இலங்கையில், தங்கத்தின் விலை இன்று திங்கட்கிழமையும் மாற்றமின்றி, அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 318,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 294,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை 24 கரட் தங்கம் ஒரு கிராம் 39,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 36,750 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.