இலங்கையை பாதித்த குறைந்த வளிமண்டலத் தாழ்வுநிலை தற்போது நாட்டை விட்டு விலகி வருவதால், அதன் தாக்கம் படிப்படியாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (செப்டம்பர் 16) மேல், சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் சுமார் 75 மி.மீ. வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.










