இன்று காலையுடன் ஊரடங்கு தளர்வு

கொழும்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்து மணியுடன் நிறைவடைந்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் இன்று அதிகாலை 5:00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இதேவேளை, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொது போக்குவரத்து சேவைகள் வழமையாக இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அவ்வப்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதால் பஸ்களை இயக்குவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.