
இன்றும் அதி உயர் வெப்பநிலை
நாட்டின் பல மாகாணங்களில் இன்றைய தினமும் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
வீடுகளில் உள்ள முதியோர் மற்றும் நோயாளர்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
