இன்றுடன் பாடசாலைகளுக்கு விடுமுறை

நாடளாவிய ரீதியில் 10,146 அரச பாடசாலைகளுக்கு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2022ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.இதன் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மீண்டும் அடுத்த மாதம் 12 ஆம் திகதி பாடசாலையின் கற்பித்தல் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்