
இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை – மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ள போதும், மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட கட்டண திருத்தங்கள் தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை, என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளிப்பதானது முதல் தடவை அல்ல, கட்டண திருத்தங்களுக்கான கோரிக்கை 2015 முதல் பலமுறை முன்வைக்கப்பட்டது.
இதனை நடைமுறைப்படுத்தவோ, திருத்தவோ அல்லது பிரேரணையை நிராகரிக்கவோ அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, மின்சாரக் கட்டணத்தை திருத்தும் கோரிக்கை தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை, என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

