
இன்சூரன்ஸ் பணத்தை பெற பாம்பை கடிக்க விட்டுத் தந்தையின் உயிரைப் பறித்த மகன்கள்!
தந்தையின் பெயரில் உள்ள ஆயுள் காப்பீட்டு பணத்தை பெற்றுக் கொள்வதற்காக அவரது மகன்களே தந்தையை கொலை செய்த சம்பவம் தமிழகத்தின் திருவள்ளூரில் அரங்கேறியுள்ளது.
பாடசாலை ஒன்றில் ஆய்வக உதவியாளராக பணியாற்றும் 56 வயதுடைய ஆண் ஒருவர் அண்மையில் உயிரிழந்தார்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மகன்கள் இருவரும் கட்டு விரியன் பாம்பை விட்டுத் தந்தையைக் கடிக்க வைத்தது வெளிவந்துள்ளது.
காவல்துறையின் விசாரணைகளின் போது, இந்திய மதிப்பில் 3 கோடி ரூபாய் காப்பீட்டு பணத்திற்காக அவர்கள் இந்த கொடூர செயலை மேற்கொண்டமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் மகன்கள் இருவர் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
