
இனம் தெரியாத நபரால் தீ வைக்கப்பட்டு வீடொன்று எரிந்து நாசம்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3ம் கட்டை புளியங்குள பகுதியில் இனம் தெரியாத நபரால் வீடொன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.
வீடு தீப்பற்றியதனால் வீட்டு உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக வீட்டு உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

