
இனந்தெரியாத நபர்களால் காட்டுக்கு தீ வைப்பு
-யாழ் நிருபர்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை – புளியந்துறை காட்டுக்கு இனந்தெரியாத நபர்கள் தீ மூட்டியுள்ளனர்.
இதனால் குறித்த காடு தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது.
இதன்போது வலி. மேற்கு பிரதேச சபைக்கு தகவல் வழங்கப்பட்டது.
வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு சென்ற வலி. மேற்கு பிரதேச சபையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.நடனேந்திரன் மற்றும் அப்பகுதிக்கான கிராம சேவகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை பார்வையிட்டனர்.

