
இந்த வருடத்தில் 322 இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 322 இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அத்துடன், அவர்களின் 44 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதை நிறுத்துமாறும், கைதான மீனவர்களை விடுவிக்குமாறும், கோரி தமிழகத்தின் பல பகுதிகளில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மேலும், இந்திய மத்திய அரசு இதற்கான உரிய தீர்வை எட்ட வேண்டும் என தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
