இந்த வருடத்தில் மாத்திரம் டெங்கு நோயினால் 43 மரணங்கள்

நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயினால் 4 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

டெங்கு நோயினால் இந்த வருடத்தில் மாத்திரம் 43 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்தமாதத்தின் முதலாம் திகதி முதல் நேற்று புதன்கிழமை வரையான காலப்பகுதியில் 1,685 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.