
இந்த வருடத்தில் இதுவரை நான்கு சிறுத்தைகள் உயிரிழப்பு!
ஹட்டனில் உள்ள மேஃபீல்ட் தோட்டத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
வாகனம் மோதியதில் காயமடைந்து சிறுத்தை உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
2025 ஆம் ஆண்டில் பதிவான நான்காவது சிறுத்தை மரணம் இது என்று இலாப நோக்கற்ற சிறுத்தை பாதுகாப்பு அமைப்பான லியோபோகான் (இலங்கை) தெரிவித்துள்ளது.
