இந்த வருடத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் 2,239 பேர் உயிரிழப்பு

நாட்டில், இந்த ஆண்டு இது வரையான காலப் பகுதியில், பதிவான விபத்துச் சம்பவங்களில் 2,239 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

2025 ஜனவரி முதல் இந்த மாதம் 23 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே இந்த விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதன்படி, 2,107 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், இதில் 2,239 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 4,149 பாரதூரமான விபத்துக்களும் 7,831 சிறு விபத்துக்களும் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், 3,295 விபத்துக்களில் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.