இந்த ராசிகளுக்கு தேடி வரும் விநாயகர் அருள்!
பிள்ளையார் அல்லது கணபதி என அழைக்கப்படும் முழு முதற்கடவுள் விநாயகர். இவர் நம்மில் பலருக்கு விருப்பமான கடவுளாக இருப்பவர். எந்த விஷயத்தை செய்தாலும் இவரை வழிபட்டு துவங்குவதுதான் முறை. நம்மில் பலர் இன்றும் எழுதுவதற்கு முன் தாளில் “உ” என விநாயகர் சுழி போட்டுத்தான் தொடங்குவோம். இது, வழக்கமாகி விட்டது. இவரை, இன்னும் சிலர் யானை முகத்தான் எனவும் அழைப்பார்கள். அப்படி அனைவருக்கு பிடித்த விநாயகருக்கு பிடித்த ராசிக்காரர்கள் யார்?
ராசி சக்கரத்தில் இருக்கும் 12 ராசிகளில் இறைவன் கணபதிக்கு சில குறிப்பிட்ட ராசிகள் மிகவும் பிடித்தமானது என கூறப்படுகிறது. இந்த குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்குமாம். இவரின் அருள் எப்போதும் இந்த குறிப்பிட்ட ராசிக்கு இருக்கும் என கூறப்படுகிறது. விநாயகருக்கு பிடித்தமான ராசிகள்….
ராசி சக்கரத்தில் முதல் ராசியான மேஷ ராசி, விநாயக பெருமானுக்கு மிகவும் பிடித்த ராசி என கூறப்படுகிறது. இவர்களுக்கு கணபதியின் அருள் எப்போதும் கிடைப்பதால், அறிவாளிகளாக இருப்பார்கள். இவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். வாழ்க்கையில், அடுத்த அடுத்த கட்டத்திற்கு தடையின்றி செல்வார்கள். எவ்வளவு கடுமையான நேரம் வந்தாலும் இவர்கள் பொறுமையாலும், புத்திசாலியாகவும் இருப்பார்கள். இவர்கள், புதன் கிழமைதோறும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால், இவரின் அருள் உங்கள் மீது எப்போதும் இருக்கும். அத்துடன் விநாயகர் மந்திரங்களை உச்சரிப்பதும் நல்ல பலன் தரும்.
விநாயகருக்குப் பிடித்த இரண்டாவது ராசி மிதுனம். இந்த ராசிக்காரர்கள் விநாயகப் பெருமானின் அருளால் தொழிலில் வெற்றி பெறுவார்கள். குறிப்பாகஇ இந்த ராசியின் பூர்வீகவாசிகள் தங்கள் வியாபாரத்தில் அல்லது கல்வித் துறையில் வெற்றி பெறுவார்கள். அவர்களின் ஆளுமை மற்றவர்களை எளிதில் ஈர்க்கக்கூடியது. கணபதியின் அருள் உங்களுக்கு என்றும் நிலைத்திருக்க வேண்டுமெனில், புதன்கிழமை விநாயகரை வழிபடவும். சாமந்தி பூக்கள் அல்லது சாமந்தி மாலைகளை வைத்து பூஜை செய்யவும்.
கணபதிக்கு மூன்றாவது விருப்பமான ராசி மகரம். விநாயகப் பெருமானின் ஆசியுடன், இவர்கள் மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர்கள். தனக்கான வேலையை நேர்மையாக செய்பவர்கள். மற்றவர்களை ஏமாற்ற விரும்புவதில்லை. இவர்கள் ஒரு பணியை மேற்கொண்டால், அதை முடித்த பின்னரே அவர்கள் ஓய்வை பற்றி சிந்திப்பார்கள். அதே போல, தோல்வியை ஏற்றுக்கொள்ள தயங்குவதில்லை. இந்த குணத்தால், இவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றியை அடைகிறார்கள். புதன் கிழமைதோறும் விநாயகர் கோயிலுக்குச் செல்ல வேண்டும். கணபதி மந்திரத்தை உச்சரியுங்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்