இலங்கை மது வரி திணைக்களத்திற்கு அரசாங்கம் நிர்ணயித்த இலக்கு வருமானத்தில் 98% இந்த வருடம் ஈட்டப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு மதுவரி திணைக்களத்திற்கு 17,700 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2024 ஆம் ஆண்டில் பல்வேறு இலக்குகள் மூலம் அதிக வருமானத்தை ஈட்டுவதற்கு ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.