இந்த ஆண்டில் இதுவரை குறைந்தது 400 யானைகள் உயிரிழப்பு

இலங்கையில் 2023 ஆம் ஆண்டில் இதுவரை குறைந்தது 400 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டாரவின் கூற்றுப்படி,

யானை – மனித மோதல்கள், துப்பாக்கிச் சூடு அல்லது வாகன விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறைந்தது 200 யானைகள் உயிரிழந்துள்ளன.

பல்வேறு நோய்களினால் இவ்வருடம் பல காட்டு யானைகளும் உயிரிழந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை யானைகளின் எண்ணிக்கை தற்போது 6,000 ஆக இருப்பதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் கூறினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்