இந்தோனேஷியாவில் கனமழை: 11 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவில் தொடரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு மலுகு மாகாணம் டெர்னேட் தீவில் பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ருவா கிராமத்தில் உள்ள பல்வேறு குடியிருப்புகள் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

மேலும், அங்கு பிரதான சாலை மற்றும் கிராமத்திற்கான தரைவழி தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிராமத்தில் உள்ள பல வீடுகள், கட்டிடங்கள் சேற்றில் புதைந்துள்ள நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்