இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மையம் தகவல் வெளியிட்டுள்ளது

அந்நாட்டு நேரப்படி இன்று வியாழக்கிழமை அதிகாலை 12:01 மணியளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலாட் தீவுகளின் வடமேற்கே 41 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் 32 கிலோமீற்றல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

எனினும் நிலநடுக்கம் பெரிய அலைகளை உருவாக்கவில்லை என்பதால் சுனாமி (Tsunami) எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்