
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு
இந்தோனேசியாவின் மத்திய தெற்கு மாகாணத்தில் உள்ள எரிமலை வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் ஃப்ளோரஸ் தீவில் உள்ள லெவோடோபி லகி எனும் எரிமலை நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வெடித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை காலைவரை குறித்த எரிமலையானது மூன்று முறை வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்பகுதியில் 8,000 மீட்டர் உயரத்திற்குச் சாம்பல் படலம் காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த எரிமலை வெடிப்பு காரணமாக பாலி விமானத்தின் பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
