இந்துக்கள் மீது தாக்குதல்: ஐ.நா கவலை

பங்களாதேஷில் வாழும் இந்துக்களுக்கு எதிராகப் பரவலாக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளதுடன், பங்களாதேஷில் உள்ள இந்துக்களைப் பாதுகாக்க முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு எதிராகக் பங்களாதேஷ் இந்து, பௌத்த, கத்தோலிக்க ஒற்றுமை குழுவால் கண்டன பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்