இந்திய விசா – விசேட அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி முதல் இந்தியாவுக்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் நேரடியாக கையாளப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இதன்படி இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டி உதவி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றினால் குறித்த சேவைகள் நேரடியாக கையாளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், விசா தொடர்பான விடயங்களை தற்போது கையாளும் சேவை வழங்குநர் எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை மட்டுமே இயங்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.