இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!

இந்திய முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், உடல் நலக்குறைவால் நேற்று வியாழக்கிழமை காலமானார்.

புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் அரசியல்வாதியுமான மன்மோகன் சிங்கின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து நேற்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சமீப காலமாகவே உடல்நலக்குறைவு காரணமாக, மன்மோகன் சிங் அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தார்.

2024ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போனது.

ஏப்ரல் 2024 இல் ராஜ்யசபா உறுப்பினர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசாங்கத்தின் பிரதமராக இருந்தார்.

தொடர்ந்து இரண்டு முறை பிரதமராகப் பணியாற்றி மன்மோகன் சிங், அதற்கு முன்பு 1991ஆம் ஆண்டு பிவி நரசிம்ம ராவ் அரசில் நிதி அமைச்சராகப் இருந்தார்.

அப்போது அவருடைய செயல்பாடுகள் காரணமாக இந்தியாவின் பொருளாதாரத்தின் சிற்பிகளில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்