
இந்திய மீனவர்களை விடுதலை செய்ய கோரி மேற்கொண்ட நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தம்
-யாழ் நிருபர்-
இலங்கைச் சிறையில் உள்ள மூன்று மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் நடத்திய நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 3ஆம் திகதி மீன்பிடிக்க சென்ற 23 மீனவர்ககள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்திய போது அவர்களுள் 20 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டதுடன் இரண்டு படகு ஓட்டுனருக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், ஒரு மீனவர் இரண்டாவது முறை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் இலங்கை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நான்கு நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இன்று காலை ராமேஸ்வரத்திலிருந்து தொடர்வேலை நிறுத்த நடைபயணம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவர்கள் 11 கிலோமீற்றர் வரை சென்று கொண்டிருக்கும் போது மாவட்ட ஆட்சியாளர் அவர்களை தடுத்து நிறுத்தி வழங்கிய உறுதி மொழிக்கு அமைய ஒருவார காலத்திற்கு தற்காலிகமாக இந்த நடைபயணம் நிறுத்தப்பட்டுள்ளது.
