இந்திய பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இளமைக்காலம் முதல் தேசியத் தலைவராக உருவெடுத்தது வரையிலான அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து மா வந்தே (MAA VANDE) என்ற பெயரில் திரைப்படம் உருவாக உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தனது 75வது பிறந்தநாளை நிறைவு செய்துள்ள நிலையில், இளமைக்காலம் முதல் தேசியத் தலைவராக உருவெடுத்தது வரையிலான அவரது வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கப்பட இருக்கிறது.

இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் படத்தின் பெயரைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தை சில்வர் காஸ்ட் கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும்.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு ‘மா வந்தே’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப் படத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயார் ஹீராபென் இருவருக்கும் உள்ள ஆழமான பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் உருவாக இருக்கிறது.

படக் குழு வெளியிட்டுள்ள போஸ்டரில், “ஒரு தாயின் துணிவு பல போர்களை வெல்லும்” எனும் பிரதமர் மோடியின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

தனது திரைப் பயணத்தைத் தமிழ்ப் படத்தில் தொடங்கி பின்னர் மலையாள திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர், இந்தப் படத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இயக்குநர் கிராந்தி குமார் இயக்கத்தில், கேஜிஎஃப் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இசையில், பாகுபலி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கே.கே.செந்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளனர்.

பான் இந்தியா படமாக உருவாக இருக்கும் ‘மா வந்தே’ ஆங்கிலத்திலும் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலக அளவில் இந்தப் படம் கொண்டு செல்லப்படும்.

தமிழில் சீடன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான மலையாள நடிகர் உன்னி முகுந்தன், ‘மா வந்தே’ படத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.