இந்திய கடற்றொழிலாளர்கள் 7 பேர் கைது!

இந்திய கடற்றொழிலாளர்கள் எழுவரை மன்னார் கடற் பிராந்தியத்தில் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களின் படகொன்றையும் கைப்பற்றியதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை பகல் கைதாகிய இந்திய கடற்றொழிலாளர்கள் எழுவரும் கரைக்கு அழைத்து வரப்படுவதாகவும் அவர் கூறினார்.

விசாரணைகளின் பின்னர் இந்திய கடற்றொழிலாளர்களை, கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.