இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பூர்ணம் குமார் விடுவிக்கப்பட்டார்

கடந்த ஏப்ரல் 23 அன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது தவறுதலாக பாகிஸ்தானுக்குள் நுழைந்தபோது பாகிஸ்தான் படையினரால் பிடித்து தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பூர்ணம் குமார் விடுவிக்கப்பட்டார்.

அவர் இன்று புதன்கிழமை காலை விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அவர் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியா திரும்பியுள்ளார்