
இந்திய அண்ணாமலைக்கு இலங்கை அண்ணாமலை சவால்
-கிளிநொச்சி நிருபர்-
அண்மை நாட்களாக எல்லை தாண்டி இந்திய இழுவைமடு படகுகள் வருகை அதிகரித்துள்ளதாக, வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் கா.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை அவர் தனது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தாம் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் எல்லை தாண்டிய இந்தியா இழுவை மடி படகுகள் மூலம் இருக்கின்ற கடல் வளங்களை அழித்துச் செல்லுகின்றனர் எனவும்,
தமக்கு தொழில் செய்வதற்கு மண்ணெண்ணை இல்லாத நிலையில் கடலட்டை தொழிலாளர்கள் தென்பகுதியிலிருந்து வருகை தந்து அதிகளவில் கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அது எவ்வாறு சாத்தியம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதே வேளை, இந்திய தமிழ்நாடு பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை கடல் ஏல்லைகள் தெரியாமல் பேசுவதாகவும், கச்சதீவு எங்கு உள்ளது? முல்லைத்தீவு எங்கு உள்ளது? சுண்டிக்குளம் எங்கே உள்ளது? என்றும் கேள்வி ஏழுப்பினார்.
