இந்திய அணிக்கு 241 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.

கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் சார்பில் துனித் வெல்லாலகே மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் தலா 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இந்திய அணியின் சார்பில் வாசிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த நிலையில் இந்திய அணிக்கு 241 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்