இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரசிகர்களுடன் கண்டுகளித்த ஜனாதிபதி அநுர

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் வரலாற்று முக்கியமான இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கெத்தாராம மைதானத்தில் நடைபெற்றதுடன், பெரும்திரளான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரசிகர்களுடன் இப்போட்டியை கண்டுகளிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் இணைந்துகொண்டார்.

பாகிஸ்தானின் உள்துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைச்சர், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் இந்நிகழ்வில் இணைந்துகொண்டனர்.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற 2026 உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 61 ஓட்டங்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.