இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் தொடர் : மழை காரணமாக தாமதம்!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இதன்படி குறித்த இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று புதன்கிழமை பெங்களூருவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில் இன்று காலை 9.30க்கு ஆரம்பமாகவிருந்த குறித்த போட்டி மழை காரணமாக தாமதமடைந்துள்ளது.

அத்துடன் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி இதுவரை எவ்விதமான டெஸ்ட் தொடர்களையும் கைப்பற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்