
இந்தியா-தெலுங்கானாவில் நில அதிர்வு
இந்தியா – தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் இன்று புதன்கிழமை காலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நில அதிர்வு 5.3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது.
இன்று காலை 7:27 மணியளவில் குறித்த நில அதிர்வு 40 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
