
இந்தியா-திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி
இந்தியா-திருச்சி சிறப்பு முகாமில் ஈழத் தமிழர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்
திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை, நைஜீரியா, இந்தோனேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த குற்ற செயலில் ஈடுபட்ட மற்றும் கடவுச்சீட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளனர்.
இதில் இலங்கையைச் சேர்ந்த 108 பேர் உள்ளனர்.
இவர்கள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த மாதம் 20ம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதில் 8க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிப்பு காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் முகாமுக்கு வரவழைக்கப்பட்டனர்.
தொடர்ந்து அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்து ஈழத் தமிழர்களில் ஒருவரான உமாரமணன் என்பவர் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீ குளித்துள்ளார்.
