இந்தியா – டெல்லியில் லேசான நிலநடுக்கம்!

இந்தியா – டெல்லியில் இன்று திங்கட்கிழமை லேசான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று காலை 8.44 மணியளவில் ரிக்டர் அளவில் 2.8 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. கடல் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 28.86 பாகை வடக்கு அட்சரேகையிலும், 77.06 பாகை கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும்  வெளியாகவில்லை.