இந்தியா செல்பவர்களுக்கு மேற்கத்தேய நாடுகள் பயண எச்சரிக்கை
இந்தியா செல்லும் பயணிகளுக்கு மேற்கத்தேய நாடுகள் சில பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.
அமெரிக்கா, கனடா, பிரித்தானிய அரசாங்கங்கள் தமது நாட்டுப் பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளன.
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து தத்தமது நாட்டு மக்களுக்குக் குறித்த நாடுகள் அறிவுரை வழங்கியுள்ளன.
மக்கள் அதிகம் கூடும் இடங்கள், சுற்றுலா பிராந்தியங்களுக்கு செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு செல்வதைத் தவிர்க்குமாறு பிரித்தானிய அரசாங்கம் தனது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது.
