இந்தியாவுக்கு 25 % வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி

 

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருள்களுக்கு 25% வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வரி விதிப்பு தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் கலந்துரையாடலை மேற்கொண்ட நிலையில் 25% வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் முதல் புதிய வரி விதிப்பு அமுலுக்கு வருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் கொள்வனவு செய்வதன் காரணமாக ட்ரம்ப் 25% வரி விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் கூறியிருந்த நிலையிலேயே தற்போது இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.