இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்குச் செல்லவுள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி இந்திய பிரதமர் மற்றும் அரச உயர்மட்ட தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதி நிதியமைச்சர் ஆகியோரும் இந்த விஜயத்தில் பங்குபற்றவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்